கோடை கால குழந்தை பராமரிப்பு

  • Dr.Prasanna Karthik
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion           Online Consultation
 
கோடை கால குழந்தை பராமரிப்பு

15 வருடங்களுக்கு முன்பு கோடைக்காலம் வருடத்திற்கு ஒருமுறை தான். ஆனால் தற்போது சீதோசனாநிலை மாற்றத்தின் காரணமாக வருடத்தின் பாதி நாட்கள் கோடைகாலமாக இருக்கிறது.

எனவே இதில் இருந்து தங்கள் செல்ல குழந்தைகளைக் எவ்வாறு பேணிக்காப்பது என்று அறிந்து கொள்ளுவோம்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில் குழந்தைகளை வெயிலில் விளையாடுவதைத் தவிர்த்து, கேரம், செஸ் போன்றவற்றை வீட்டில் அமரச் செய்து விளையாடச் சொல்லலாம்.

வெயில் காலத்தில் குழந்தைகள் அணியும் ஆடைக்கு முக்கியத்துவம் தந்து அரிப்பு ஏற்படுத்தாத வியர்வை உறிஞ்சக்கூடிய பருத்தி ஆடைகளை அணிவிக்கலாம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் வியர்வை தடுமத்திலிருந்து பாதுகாக்க ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்கு குளிக்கச் செய்யலாம்.

சிறு குழந்தைகளாக இருக்கும்பட்சத்தில் மிதமான வெந்நீரில் தலை குளிக்கச் செய்யலாம்.

நீர்ச்சத்து அதிகமுள்ள சுரைக்காய், பூசணிக்காய், வெள்ளரிக்காய், சௌசௌ... போன்ற காய்களை உணவில் அதிக அளவில் சேர்க்க வேண்டும்.

இயற்கை நமக்கு தந்த மிகவும் அற்வுதமான ஒன்று நீர்பானங்கள் ஆகும். அதாவதுஇளநீர், பதநீர், மோர், பழச்சாறு நுங்கு போன்றவை கொடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மோரில் சிறிதளவு உப்பு சேர்த்து கொடுக்க வேண்டும். ஏனெனில் உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவை சமப்படுத்தும்.

குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறைவதை எவ்வாறு கண்டறியலாம். வறண்ட சருமம், உதடுவெடிப்பு, சிறுநீர் கழிப்பது மகிக் குறைந்த அளவே காணப்படும். சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வலி ஏற்படும். இதிலிருந்து தடுக்க நாள் ஒன்றுக்கு 1 லிருந்து 2 லிட்டர் தண்ணீர் அருந்தச் செய்ய வேண்டும்.

கோடைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

கோழி இறைச்சி, சிப்ஸ், எண்ணெயில் பொரித்த உணவுகள், காரமான உணவுகள், பிரெட் மற்றும் சப்பாத்தி, பிஸ்கட் போன்ற மாவுப் பொருட்களையம் தவிர்க்க வேண்டும்.

செயற்கை பானங்களான பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் Chemical மற்றும் Gas அதிக அளவு உள்ளதால் குழந்தைகளுக்கு இதைக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

இவைகளை நாம் பின்பற்றினாலே குழந்தைகளைக் வெயில் கால நோயில் இருந்து பாதுகாக்கலாம்.