மருத்துவ விசா

மருத்துவ / மருத்துவ உதவியாளர் விசா

நரம்பியல் தொடர்பான சிகிச்சைகள் மற்றும் சத்திர சிகிச்சைகள், கண் பார்வை குறைபாடுகள், இதயம் தொடர்பான பிரச்சனைகள், புற்று நோய் தொடர்பான பிரச்சனைகள், சிறுநீரக கோளாறுகள், மூட்டு மாற்று சிகிச்சைகள் மற்றும் மகப்பேரின்மைக்கான ஐவிஎப் முதலான மருத்துவ சிகிச்சைகளுக்காக இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர் மருத்துவ விசாவின் மூலமாக மட்டுமே வர வேண்டும். இந்த காரணங்களுக்காக வருபவர்கள் சுற்றுலாவின் விசாவில் வர இயலாது. மருத்துவ விசாவிற்கு விண்ணப்பிக்கும் ஒருவர் அதிகப்பட்சமாக மிக நெருங்கிய உறவினர்கள் அடங்கிய இரண்டு மருத்துவ உதவியாளர்களுக்கான விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்

முழுவதும் பூர்த்தி செய்யப்பட்ட விசா விண்ணப்படிவம்.

தேவைப்படும் போது பாஸ்போர்ட்டில் தொழில் சம்பந்தமான மேலொப்பம் அவசியமாகின்றது.

2 x 2 அங்குல அளவுடைய இரண்டு மிக சமீபத்திய வெள்ளை பின்னணியோடு கூடிய வண்ண புகைப்படம் (பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படமும் விண்ணப்படிவத்தில் உள்ள புகைப்படமும் விண்ணப்பதாரரின் தோற்றத்தோடு ஒத்து போதல் வேண்டும்).

தேசிய அடையாள அட்டையின் நகல் (NIC)/ஓட்டுனர் உரிம நகல்/ பிறந்த தேதிக்கான சான்றிதழ் (இலங்கை பிரஜைகளுக்கு மட்டும்)

முகவரி சான்று (தேசிய அடையாள அட்டை / ஓட்டுனர் உரிம அட்டை / வங்கி கணக்கு ஸ்டேட்மென்ட் / தொலைபேசி பில் / ஜிஎஸ் சர்ட்டிபிகேட்

மருத்துவ விசா (M) & மருத்துவ உதவியாளர் விசா (MX): மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா செல்லும் விண்ணப்பதாரர்கள் கீழ் கண்டவற்றை சமர்ப்பித்தல் வேண்டும். இந்தியாவில் சிகிச்சை பெற வேண்டியதற்கான குறிப்புகளுடனும் இலங்கையில் மருத்துவ சிகிச்சை பெற்றது பற்றியதான மருத்துவ சிகிச்சை குறிப்புகளுடனான அசல் ஆவணங்கள்.

கூடுதல் முன் படிவத்தை தனி பக்கத்தில் கீழே குறிக்கப்பட்டவாறு பூர்த்தி செய்யலாம்.

வரிசை. எண் இலங்கையில் எடுத்துக் கொள்ளப்பட்ட சிகிச்சை இந்தியாவில் பெற வேண்டிய சிகிச்சை
1. உங்களை இந்தியாவில் சிகிச்சை பெற ஆலோசனை வழங்கிய மருத்துவமனையின் பெயர் / கிளினிக்கின் பெயர் / மருத்துவரின் பெயர் இந்தியாவில் நீங்கள் சிகிச்சை பெற விரும்பும் மருத்துவனையின் பெயர் / கிளினிக்கின் பெயர் / மருத்துவரின் பெயர்
2. மருத்துவமனை அல்லது கிளினிக்கின் முழு விலாசம் நீங்கள் சிகிசை பெற விரும்பும் மருத்துவமனை அல்லது கிளினிக்கின் முழு விலாசம்
3. தொலைபேசி எண் / பேக்ஸ் எண் / மின்னஞ்சல் / இணையதளம் விலாசம் தொலைபேசி எண் / பேக்ஸ் எண் / மின்னஞ்சல் / இணையதளம் விலாசம்

தயவு செய்து அறியவும்

விசாவின் கால அளவானது ஒவ்வொரு நோயாளருக்கும் தேவைப்படுகின்ற அளவில் முடிவு செய்யப்படும்.

சாதாரணமாக அதிகபட்ச கால அளவாக ஆறு மாதங்கள் இரு நுழைவு அனுமதியுடன் வழங்கப்படும் மேலும் இது சில நிபந்தனைகளுடன் கூடுதலாக்கப்படலாம்.

இவை யாவும் ஒரு விண்ணப்பதார்ர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் முழு பட்டியல் ஆகாது. கூடுதல் ஆவணங்களை விண்ணப்பம் சமர்ப்பத்த பின்பு கோருவதற்கு ஹை கமிஷனருக்கு சகல உரிமையும் உண்டு.

பாஸ்போர்ட்டானது குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லத்தக்கதாக இரண்டு வெற்று தாள்களுடன் விண்ணப்ப தேதியில் இருத்தல் வேண்டும்.

சிதைந்து போன அல்லது சேதமடைந்த பாஸ்போட்டுகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

சில தனிப்பட்ட நிகழ்வுகளில் கூடுதல் பரிசீலனை கால அவகாசம் தேவைப்படலாம்.

விண்ணப்பதாரர்கள் தேவைப்பட்டால் இந்திய ஹை கமிஷன் முன்பாக ஒரு நேர்காணலுக்கு அழைக்கப்படலாம்.

எந்தவொரு விண்ணபத்தையும் காரணம் கூறாமல் நிராகரிப்பதற்கும் மற்றும் கட்டணத்தை திருப்பித் தராதிருக்கவும் இந்திய ஹை கமிஷனுக்கு உரிமை உள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவிற்கு பயணிப்போருக்கு மருத்துவ விசா வழங்கப்படுகின்றது. ஒரு நுழைவுடன் வழங்கப்படும் விசாவானது மூன்று மாதங்களுக்கு செல்லத்தக்கதாகும். மருத்துவ சிகிச்சையை தெரிவிக்கின்ற தொடர்புடைய கடிதங்கள் / ஆவணங்கள் பதியப்பட்ட மருத்துவமனைகள் / அரசு மருத்துவர்களால் முத்திரை மற்றும் கையொப்பமுடன் பயணத்திற்கான காரணங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். விசாவின் செல்லுபடி காலமானது விசா வழங்கப்பட்ட தேதியிலிருந்து அமுலுக்கு வரும். 2017-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் திகதியிலிருந்து ஐந்து முதல் பத்து வருடங்களுக்கு செல்லத்தக்கதான விசாக்களை கனடா நாட்டின் பிரஜைகளுக்கு வழங்க ஆரம்பித்துள்ளது.

விசா விண்ணப்பதாரர்களுக்கு கை ரேகை வைத்தல் கட்டாயமாகும். (தயவு செய்து இதனை விண்ணப்பதாரரின் அப்பாயிண்டமெண்ட் ரசீதிலும் கூட குறிக்கப்படுதல் வேண்டும்). 12 முதல் 70 வயது வரையிலான விண்ணப்பதாரர்கள் பிஎல்எஸ் மையத்திற்கு விண்ணப்பிப்பதற்காக நேரடியாக வர வேண்டும். ஐந்து வருடம் முதல் பத்து வருடங்களுக்கான விசாக்கள் தபால் மூலம் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

மருத்துவ உதவியாளருக்கான விசா


மருத்துவ உதவியாளருக்கான விசா, மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா செல்லும் நோயாளருடன் பயணிக்கும் உதவியாளருக்கு வழங்கப்படுகின்றது. இந்த விசாவானது நோயாளரின் நெருங்கிய உறவினர் / குடும்ப உறுப்பினர் அல்லது நண்பருக்கு கொடுக்கப்படலாம். மருத்துவ சிகிச்சையை தெரிவிக்கின்ற தொடர்புடைய கடிதங்கள் / ஆவணங்கள் சம்பந்தப்பட்ட பதிவு செய்த மருத்துவமனை / அரசு மருத்துவர் முத்திரை மற்றும் கையொப்பமுடன் பயணத்திற்கான காரணங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அத்துடன் நோயாளர் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருவரால் உடன் செல்லும் உதவியாளர் பற்றிய விடயம் உறுதி செய்யப்படுதல் வேண்டும். இவ்விதமான விசா ஒரு நுழைவுடன் மூன்று மாதங்களுக்கு செல்லத்தக்கதாகும். விசாவின் செல்லுபடி காலமானது விசா வழங்கப்பட்ட தேதியிலிருந்து அமுலுக்கு வரும்.

சட்ட அதிகார எல்லை

கீழ்கண்ட பகுதியில் வசிக்கும் விண்ணப்பதாரர்கள் குறிக்கப்பட்ட மேலும் வரையறுக்கப்பட்ட விண்ண்ணப்ப மையங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் பிஎல்எஸ் விண்ணப்ப மையம்
பிரிட்டிஷ் கொலம்பியா, யுகான், அல்பெர்ட்டா, சஸ்காட்சீவன் வான்குவர், சர்ரே, எட்மாண்டன், கேல்கரி
அன்ட்டாரியோ, கியுபெக் – ஒட்டாவோ அதிகார எல்லை பகுதிகளை தவிர்த்து, மணிடோபா, நியுபிரான்ஸ்விக், நோவாஸ்காட்டியா, பிரின்ஸ் எட்வர்ட் ஐலெண்ட், நியு பவுண்ட்லேண்ட் டொரண்டோ, வின்னிபெக், பிராம்டன்
ஒட்டாவா ஹல்லின் நேஷனல் கேப்பிட்டல் பகுதி, கிங்ஸ்டன், கான்வெல், ஹாக்கஸ்பரி, ஆன்பிரேயர், ரென்பிரியு, பெர்த்பிரஸ்காட், பிராக்வில்லே, கார்லிடான் பிளேஸ், ஸ்மித் பால்ஸ், மோரிஸ்பெர்க் (எல்லாம் ஒனட்டாரியாவில் உள்ளபடி), மான்ட்ரியால் (கியுபெக்கில் மற்றும் நுனாவட் பிரதேசம்) ஒட்டாவா அல்லது மான்ட்ரியா