சித்த மருத்துவம், முழுமையான ஒருங்கிணைந்த மருத்துவம்

  • Dr.Sivaraman
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
சித்த மருத்துவம், முழுமையான ஒருங்கிணைந்த மருத்துவம்

மகப்பேறின்மை குழப்பத்தால் தவிக்கும் ஏராளமானவர்களுக்கு, சென்னையில் இருபதாண்டுகளாக, லாப நோக்கில்லாமல் சித்த மருத்துவ சிகிச்சை யளித்து வருபவரும், ஆரோக்யா சித்த மருத்துவமனையின் நிர்வாகியுமான சித்த மருத்துவர் ஜி. சிவராமன் www.medicalonline.in ல் விளக்கமளிக்கிறார்.

குழந்தையின்மைக்கான பிரச்சினைக்கு நவீன மருத்துவம் செயற்கை கருவூட்டலைப் பரிந்துரை செய்கிறது. ஆனால் சித்த மருத்துவம், உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தி, இயற்கையான முறையில் கர்ப்பம் தரிக்க இயலும் என்று அறிவிக்கிறது. இதில் எது உண்மை? ஏனிந்த  முரண்பாடு?

சித்த மருத்துவத்தின் தனித்தன்மை , அது முழுமையான ஒருங்கிணைந்த மருத்துவம் என்பதே. நோயாளிகளை சோதித்து, மருந்து எழுதித் தருவது மட்டும் சிகிச்சை  கிடையாது. எம்முடைய உணவு முறை, மன நிலை, உடல் மொழி, வாழ்க்கை முறை,  மருத்துவம் என சகல அம்சங்களையும் ஆராய்ந்து சிகிச்சை யளிக்கும் முழுமையான மருத்துவமே ஒரு சிறந்த மருத்துவமாகும். நோய் இருநதால் அதனை வேரோடு அறுக்கவும், வேறு ஏதேனும் உபாதைகள் இருந்தால் அதனை உடனே சீராக்கவும் இயலும்.

குழந்தையின்மை பிரச்சினையில் சித்த மருத்துவமானது பிரக்கிருதி என்ற வாத, பித்த, கப உடலமைப்பு, வாழ்வியல் நடைமுறை, வாழிடம், மனநிலை, செய்தொழில், நாடித்துடிப்பு, உணவு முறை, கொண்டிருக்கும் தாம்பத்ய கோட்பாடுகள் என்பவற்றை அறிந்தே, குழந்தையின்மைக்கான காரணத்தை மிக அணுக்கமாக அவதானிக்கிறோம். அதேநேரம் இன்று நவீன மருத்துவம் இது தொடர்பாக அறிமுகம் செய்துள்ள பல்வேறு பரிசோதனை முறைகளை சித்த மருத்துவம் தன்னுடைய வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொள்கிறது.

சினைப்பாதையில் அடைப்பு இருந்தாலோ அல்லது சினைப்பையில் கரு முட்டையின் வளர்ச்சி சமச்சீரற்றதாக இருந்தாலோ, எண்டோமெட்ரியம் என்றுச் சொல்லப்படும் சினைப்பையின் உட்சுவரின் தடிமனில் ஏதேனும் சிக்கல் இருந்தாலோ, வேறு ஏதேனும் தொற்றுநோய்கள் கருப்பைக்குள் இருந்தாலோ, கருப்பை தன்னுடைய இயல்பான வளர்ச்சியை இழந்திருந்தாலோ தற்போது சித்த மருத்துவத்தாலும், கூடுதல் உணவாலும் குணப்படுத்த இயலும். இன்றைய பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் பொலிசிஸ்டிக் ஓவரீஸ் என்ற சிக்கலுக்கும், சாக்லேட் சிஸ்டம் என்று சொல்லப்படுகிற பிரச்சினைக்கும் சித்த மருத்துவம் தீர்வளிக்கிறது. சித்த மருத்துவத்தில் ஒரு நோயாளிக்கு வழங்கப்படும் மருந்தும், சிகிச்சை யும், மற்றொரு நோயாளிக்குப் பொருந்தாது. ஏனெனில் ஒவ்வொரு நோயாளியின் எண்ணம், குறைபாடு, தொழில், வாழ்வியல் சூழல், பின்பற்றும் தத்துவம், உணவு முறை வேறு வேறாகத்தான் இருக்கிறது. நவீன மருத்துவத்தைப் போல் ஒரேவிதமான சிக்கலுக்கு அனைவருக்கும் ஒரேவித மருந்தை பரிந்துரைப்பதில்லை. இதை சித்த மருத்துவத்தில் இன்டுவிஜுவலைஸ் புரோட்டோகோல் என்று குறிப்பிடுகின்றனர்.

ஆண்மை என்பது வேறு, குழந்தைப் பேறு என்பது வேறு. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. ஆண்மை என்பது பொட்டன்சி. ஒரு கணவன், தன்னுடைய மனைவியுடன் கொண்டிருக்கும் தாம்பத்திய உறவு. இதில்தான் ஆணுறுப்பு விரைப்புத்தன்மை, விந்து விரைவில் வெளியேறுதல் போன்றவை இடம்பெறும். குழந்தைப்பேறு என்பது விந்தணுக்களின் எண்ணிக்கை, ஒரு சினை முட்டையை கருமுட்டையாக மாற்றும் சக்தியைக் கொண்டிருத்தல் தொடர்பானவை. இவை இரண்டுக்கும் சித்த மருத்துவம் தீர்வைச் சொல்கிறது.

நீரிழிவு நோயாளிகள், பாலியல் செய்கைகள் குறித்த விழிப்புணர்வின்மை, குற்ற உணர்விற்காளாகுதல், போலியான மாற்று மருத்துவர்களின் ஆலோசனை போன்ற பல காரணங்களால் பாதிக்கப்படுபவர்கள்தான் அதிகம். இவர்களுக்கு சரியான ஆலோசனை மற்றும் பரிந்துரையை வழங்கி, மனதை உற்சாகப்படுத்தினாலே போதும்.

இவற்றையெல்லாம் கடந்து, உயிரணுக்கள் உற்பத்தியாகவும் இல்லை. சினை முட்டைகளின் உற்பத்தியும் இல்லை என்ற நிலையில், சித்த மருத்துவம் உண்மையை எடுத்துரைக்கிறது. இவர்களுக்கு சித்தமருத்துவம் பலனளிப்பதில்லை.

செயற்கை முறை கருவூட்டலுக்கு செல்லும் முன், ஒரு முறை சித்த மருத்துவத்தில் சிகிச்சை  எடுத்துப் பார்க்கலாமே என்ற எண்ணம் சரியானதா? தவறானதா? ஏன்?

தவறல்ல. மிகச் சரியான அணுகுமுறைதான். திருமணமாகி பதினெட்டு மாதம் வரை உடலுறவில் ஈடுபடுங்கள். அதில் ஏதேனும் சிக்கல் வராமல் இருப்பதை உறுதிச் செய்துகொள்ளுங்கள். அதன் பிறகும் தாய்மை அடைவதற்கான அறிகுறி தென்படவில்லை என்றால் மருத்துவ ஆலோசனை பெறுங்கள். நவீன மருந்துகளால் கூட சில தருணங்களில் பின்விளைவாக, மகப்பே றின்மையை உருவாக்கிவிடும். எனவே முதலில் பாரம்பரிய மருத்துவர்களைச் சந்தித்து, ஆலோசனை பெறுங்கள். ஆறு மாத காலத்தில் முன்னேற்றம் இல்லை என்றால் சோதனைக்குழாய் மூலமாகக் குழந்தை பெற்றுக்கொள்வதில் தவறில்லை.

நவீன மருத்துவர்கள் மனிதர்களின் உடலை, வேதியல் பொருட்களின் கலவையாகத்தான் பார்க்கிறார்கள். இதனால் அவர்களின் சிகிச்சை களில் ஒருவித பொதுப்படைத் தன்மை இருக்கிறது. இதனை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் சித்த மருத்துவம் மெய்ஞானத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதால் அதில் ஒருவித பாதுகாப்பற்ற தன்மை இருப்பதாக அனைவரும் கருதுகிறார்கள். இது பலமா? பலவீனமா?

பலம்தான்; பலவீனமல்ல. எப்படியெ னில், இன்றைய அறிவியல் நிறைவு பெற்ற ஒன்றல்ல. இன்றைக்கு உண்மை என்று அறிவித்ததை, நாளை பொய் என்று கூறி திரும் பப் பெற்றுக்கொள்ளும். ஒரு எளிய உதாரணம். இருபதாண்டுகளுக்கு முன் யாருக்காவது உடலில் தீக்காயம் ஏற்பட்டுவிட்டால் உடனே அவர்களை ஒரு போர்வையால் சுற்றிவிடுங்கள். தண்ணீரைத் தெளிக்காதீர்கள். என்று விளம்பரமே செய்தார்கள். இது அன்றைய புரிதல். காரணம் தீப்புண்ணில் தண்ணீர் பட்டால் கொப்பளம் ஏற்பட்டு மரணம் அடைய நேரிடும் என்றார்கள். ஆனால் இன்று தீக்காயம் ஏற்பட்டுவிட்டால் அவ்விடத்தில் குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு சுத்தப்படுத்துங்கள். ஏனெனில் அவ்வாறு சுத்தப்படுத்தும்போது, தீப்புண்களை ஆற்றும் புரதம் அப்பகுதிக்கு வருகிறது என்கிறார்கள். இது இன்றைய புரிதல். எனவே நவீன மருத்துவம் மாற்றத்துக்குரியது. முழுமையான புரிதலைக் கொண்டிருக்கவில்லை. இன்றைய மனிதனின் தேவையையும், அவனுடைய எண்ணத்தையும் பிரதிபலிக்கும் வகையில் செயற்படுவது தான் நவீன மருத்துவம். ஆனால் சித்த மருத்துவம் என்பது, ஒரு மனிதனை மெய்ஞானத்தில் முழுமையாக பார்ப்பது. அவனுடைய உணர்வுக ளால், புலன்களால், தத்துவங்களால், பாரம்பரியத்தால், கோள்களின் வீச்சால், பஞ்ச பூதங்களின் ஆளுகையால் பார்ப்பது. அதனால் அவர்களின் பார்வை இன்றைய அறிவியலுக்கு அப்பாற்பட்டது.

நவீன மருத்துவம் செல்களின் கூட்டை அடிப்படையாக வைத்து இயங்குவது. சித்த மருத்துவம் பல தத்துவங்களின் கூட்டு. தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட மனிதனை மீட்டெடுத்த நவீன மருத்துவத்தால், தொற்றுகளால் உருவாகாத நீரிழிவு, இரத்தக் கொதிப்பு போன்றவற்றை வென்றெடுக்க முடியவில்லை. எனவே இனி வருங்காலங்களில் ஹோலிஸிடிக் அப்ரோச்சை க் கொண்டிருக்கும் சித்த மருத்துவம் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உணடாகும்.

சித்த மருத்துவ சிகிச்சை  வெளிப்படையாக இருப்பதில்லையே?

தற்போது வெளிப்படையாகிக் கொண்டு வருகிறது. வெளிப்படையாக இல்லாமல் இருந்ததற்கு சமூக காரணங்களே அதிகம். முன்பொருகாலத்தில் இம்மருத்துவம் ஒடுக்கப்பட்ட ஒரு விடயமாகவே இருந்தது. மருத்துவம் தெரிந்த ஒருவருக்கு உரிய சமூக அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அதனால் தன்னிடம் இருந்த அற்புத திற மையை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல், தங்களுடைய வாழ்வாதாரமாகக் கருதினர் ஒரு பிரிவினர். மற்றொரு பிரிவினரோ உயிர் காக்கும் உன்னத சிகிச்சை யான இம்மருத்துவத்தை, பக்குவப்பட்ட மனிதனிடத்தில் தான் சே ர்ப்பிக்கவேண்டும் என்ற கொள்கையினராக இருந்தனர். அவர்களுடைய நோக்கத்தின் படி, பணத்தாசை யில்லாதவராகவும், மனிதர்களிடம் பாரபட்சம் காட்டாதவராகவும், மனிதர்களை நேசிப்பவர்க ளாகவும் இருக்கவேண்டும் என்று விரும்பினர். அத்துடன் பன்னிரண்டு ஆண்டு கால சீடராக இருக்கவேண்டும் என்றும் விரும்பினர். இந்த இரண்டு காரணங்களால் சித்த மருத்துவம் மிகக் குறைந்த அளவினரிடையே இருந்து வந்தது. ஆனால் பிற்காலத்தில், பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பின், இம்மருத்துவத்தைப் பணமாக்கும் எண்ணத்தில் பயிற்றுவித்தனர். இத்தகைய காரணங்களால் மிகக் குறைவான நபர்களிடமே இருந்த நிலையில், ஆங்கில மருத்துவம் நவீன தொழில் நுட்பம், நோய் எதிர்ப்பு, தொற்று கிருமிகளின் அழிவு எனப் பல கோணங்களில் இயங்கி, மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றது. நவீன மருத்துவர்கள் சித்த மருத்துவத்தில் பொதிந்திருக்கும் உண்மைகளை உணர்ந்து, அதனை ஆய்விற்கு உட்படுத்தி வருகின்றனர். அதனை உணர்ந்த சித்த மருத்துவர்கள் விழிப்படைந்து, தங்களின் பணியைத் தொடர்கின்றனர்.

தங்களின் மருத்துவ அனுபவத்தில் சாதனையாக எதனைக் கருதுகிறீர்கள்?

சமீபத்தில், திருமணமாகி ஒன்பது ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினர் என்னிடம் சிகிச்சை க்காக வந்தனர். அவர்களைப் பரிசோதனை செய்ததில், இரண்டு சினைப்பை குழாய்களிலும் அடைப்பு இருந்தது. அதனால் வேறு வழியில்லாமல் இக்ஸி முறையில் குழந்தைப் பேறு அடைய தீர்மானித்திருந்தார்கள். இந்நிலையில் அவர்களுக்கு சூதக வாயுவிற்கான சிகிச்சை யை நான் மேற்கொண்டு வந்தேன். நான் செய்து வரும் சிகிச்சை  குறித்து என்னுடைய பேராசிரியரிடம் விவாதித்தேன். அவர், `நவீன மருத்துவத்தின் படி யூட்ரஸிற்குள் ரேடியோ எக்டிவிட்டியின் படி ஒரு பொருளை ஊடுருவ வைக்கிறார்கள். ஒரு அன்னியப் பொருள் கருப்பைக்குள் ஊடுருவும்போது அவ்விடத்தில் ஒரு தாக்கம் ஏற்பட்டு, இறுக்கம் உருவாகும். அதனால் ஊடுருவிய பொருளை புறந்தள்ளவே முயற்சிக்கும். நாடி பார்த்து நீ வழங்கும் சிகிச்சை யைத் தொடர்ந்து செய்\' என்று அறிவுரை வழங்கினார். அன்று மாலையே அந் தத் தம்பதிகள் என்னைச் சந்தித்து, கரு உண்டாகியிருப்பதாகக் கூறி, என்னையும் மகிழ்ச்சியடையச் செய்தார்கள். அதேபோல் 76 வயதுடைய பெண் ஒருவருக்கு கருப்பையில் ஏற்பட்ட புற்றுநோய் கட்டியை நான்கு மாதத்தில் குணப்படுத்தியிருக்கிறேன்.

இன்றைய வாழ்வியல் ரொம்ப முக்கியம். நாம் எப்படி வாழ்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நம் ஆரோக்கியம் இருக்கிறது. பணிச்சுமையும், மனச்சுமையும் அதிகரித்து, அதனைப் பகிந்துகொள்ள வடிகால் இல்லாமல், தனித்தனித் தீவுகளாக வாழத் தொடங்கிவிட்டோம். புறச்சூழலும் மாசடைந்துள்ளது. இந்த இரண்டு காரணங்க ளால் மனிதன், நோய்வாய்ப்படுகிற தன்மை அதிகரித்துள்ளது. அதனால் இவ்விரு காரணிகளையும் தவிர்த்து நோய் உங்களை அண்டவிடாமல் வாழ்வதே நல்லது.

தொடர்புக்கு: 0091 94440 27455