அனைத்து வயதினருக்கும் ஆயுர்வேத மருத்துவம்

  • Dr.Dhanvanthri Premvel
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
அனைத்து வயதினருக்கும் ஆயுர்வேத மருத்துவம்

ஆயுர்வேத சிகிச்சைகளில் பிரபலமானவரும், மதுரை தன்வந்திரி மருத்துவமனையின் நிர்வாகியுமான டாக்டர் எஸ்.தன்வந்திரி பிரேம்வேல், www.medicalonline.in க்காக அளித்த செவ்வி இதோ.

விஷ்ணுபெருமானின் அம்சமான தன்வந்திரி, மருத்துவத்தின் தலையாய தெய்வமாகக் கருதப்படுகிறார். பாற்கடலி னின்று, கையில் அமிர்தத்தைத் தாங்கிக் கொண்டு வெளிப்பட்டார் என்பது புராணச் செய்தி.

ஆயுர்வேதம்
ஆயுர்வேதம் என்பது இரு வடமொழி சொற்களால் ஆனது. ஆயு என்ற சொல் வாழ்க்கை முறை அல்லது வாழ்க்கையை யும் வேதா என்ற சொல் அறிவியல் அல்லது அறிவையும் குறிக்கும். ஆயுர் வேதமென்பது வாழ்க்கை மட்டுமல்ல, அறிவியலின் முறையுமாகும்.

செயல்முறைகள் :

மூட்டு, முழங்கால் வலி, பக்கவாதம், நரம்பு நோய்கள், மூச்சுத் திணறல், ஸைனஸ், தொடர் தலைவலி, ஆஸ்துமா, நீரிழிவு, தலை இறுக்கம், பலவகை பிடரிவலி, சிறுநீரகக் கோளாறுகள், எல்லா விதமான சருமநோய்கள் போன்ற வற்றிற்கு மிகத்திறன் வாய்ந்த மருத்துவ முறைகள் உண்டு.

பிழிச்சல் (காயசோகை) :

இந்த சிகிச்சை முறையில், பதமான வெப்பத்தில் மருத்துவ எண்ணெய் உடல் முழுவதும் தொடர்ச்சியாகத் தேய்க்கப்படுகிறது. ஆரோக்கியமான ஒருவருக்கு இச்சிகிச்சை மூலம் உடல் பொலிவும் வளப்பமும் கொடுக்கப் படுகிறது. இந்த சிகிச்சை மூட்டு வலி, பக்கவாதம், பாலுணர்வுத் தளர்ச்சி, நரம் புத்தளர்ச்சி, ஒருபுறம் செயலற்ற தன்மை போன்ற நோய்களைக் குணப்படுத்தும்.

மருத்துவ நீராவிக் குளியல் :

இந்த சிகிச்சையில் 20 அல்லது 30 நிமிடங்களுக்கு மருத்துவ எண்ணெய், ஆயுர்வேத மூலிகைகள் கொண்டு சிறப்பான உபகரணங்கள் மூலமாக நீராவிக் குளியல் அளிக்கப்படுகிறது. மருந்துத் தன்மைன் கொண்ட ஆவி, உடலிலுள்ள தடைப்பட்ட தசைக் கூறுகளை ஊடுருவி, நோய்களுக்குக் காரணமான இறுக் கங்ளை நீக்கி, அசுத்தங்களை வெளியேற்றுகிறது. இந்த சிகிச்சை, வாதம் சம்பந் தமான எல்லா நோய்களுக்கும் ஏற்றது. மேலும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய் களை குணப்படுத்தவும் உடல் பருமனைக் குறைக்கவும் அனைத்து வகையான சரும வியாதிகளைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

நஸியம் :

மூலிகைச்சாறு மற்றும் மருத்துவ எண்ணெய் முதலியவற்றை மூக்கின் வழியாக 7லிருந்து 14 நாட்கள் செலுத்தவேண்டும். இந்த சிகிச்சை, தலைவலி, வாதம், மூளை சம்பந்தப்பட்ட நோய்கள், தோல் சம்பந்தப்பட்ட நோய் களுக்கும் ஏற்றதாகும்.

தாரை :

மூலிகை எண்ணெய், மருந்து கலந்த பால், தயிர் ஆகியவற்றைக் கொண்டு நோயாளி யின் நெற்றியில் தாரையாக விழச் செய்வதே இம்முறையாகும். மறதி, மன இறுக்கம், சரும நோய், வாதம் சம்பந்தப்பட்ட நோய்களை இந்த சிகிச்சை குணப்படுத்துகிறது.

கிளி :

மூலிகை இலை மற்றும் மூலிகைப் பொருட் களாலான கூழ் ஆகியவற்றைத் துணியில் கட்ட வேண்டும். அதை மருத்துவ எண்ணெய்யில் முக்கி, உடம்பு முழுவதும், ஒத்தடம் கொடுக்க வேண்டும். இந்த சிகிச்சை,  மூட்டுவாதம், மூட்டு வீக்கம், விளையாடும் போது ஏற்படக் கூடிய காயங்கள் போன்றவற்றை குணப் படுத்துகிறது.

பிண்ட ஸ்வேதம் (நவரக் கிழி) :

உடல் முழுவதுமோ அல்லது குறிப்பிட்ட பகுதியில் மட்டுமோ மருந்து மூலிகைகள் மற்றும் நவரை அரிசி (மருந்து பொருட்களாலான கூழ்) இவற்றை மெல்லிய துணியில் கட்டி, 60 அல்லது 90 நிமிடங்கள் வரை ஒத்தடம் கொடுப் பதாகும். இந்த சிகிச்சை, வாதம், மூட்டு வலி, கை, கால் தளர்ச்சி, சரும நோய், மூட்டு வீக்கம், மூலம் தொடர்வாதம், எலும்பு வாதம், தசைத் தளர்ச்சி போன்றவற்றை குணப்படுத்துகிறது.

யோகாசனம் :

யோகம் என்றால் ஒன்றுபடுதல் என்பது பொருள். உடலையும் மனதையும் ஒன்றிணைக்கும் கருவியாக யோகம் இருக்கிறது. பதஞ்சலி முனிவரின் கூற்றின்படி உடல் சக்தியை / பிராண சக்தியை யோகத்தால் வளப்படுத்த வாழ்க்கையைத் திறம்பட நடத்திச் செல்ல இயலும். யோகாசனப் பயிற்சி தற் போது பல்வேறு நோய்களை மற்றும் கோளாறுகளைத் தீர்க்கும் யோகாசன சிகிச்சை முறையாக அளிக்கப்படுகிறது. யோகிகளுக்கு மட்டும்தான் யோகா சனம் பயனளிக்கும் என்ற நிலை மாறி, சாமானியர்களும் யோகா முறைப் படியான சுக வாழ்வை அடையச் செய்ய முடியும்.

தொடர்புக்கு: +91 452 2692721